சென்னை: வயதானவர்கள் ரேசன் கடை அதிகாரிக்கு கடிதம் கொடுத்து மாற்று நபர் மூலம் ரேசன் பொருட்களை வாங்கலாம் என சட்டமன்றத்தில் அமைச்சர்  சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 13ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்  நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து 14ம் தேதி சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்றுமுதல் (16ந்தேதி) பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விவாதத்தின்போது  பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், வயதானவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளது, தற்போது விரல் ரேகை முதல் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டியது இருப்பதால், வயதானவர்கள் ரேசன் கடைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. கடிதம் மூலம் மாற்று நபர்கள் மூலம் பொருட்கள் வாங்கலாம். ஆனால், ரேஷன் கடை ஊழியர்களிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும் என தெரிவித்தார்.