சென்னை:  தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் குறித்து, ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு (2020) டிசம்பரில் நடைபெற்றது. அப்போது, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், எல்லை வரையறை, வார்டு பிரித்தல் போன்ற நடவடிக்கை காரணமாக  தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த 9 மாவட்டங்களிலும் செப்டம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதி மன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறத.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில்,  உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள  மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.  அதன்படி நேற்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்,  முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.