மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம்: தமிழக அரசு தகவல்

Must read

 

டாக்டர் எட்வின் ஜோ

மதுரை:

மிழக மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், எட்வின் ஜோவையே மீண்டும் நியமனம் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக எட்வின் ஜோவை கடந்த ஆண்டு தமிழக அரசு நியமனம் செய்தது. இதை எதிர்த்து, கரூர் மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி கயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், எட்வின் ஜோ நியமனத்தை மதுரை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு கடந்த 31-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நடைபெற்ற விசாரணையின்போது,   ஆஜரான அரசு வழக்கறிஞர்  மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியான வர்களின் பட்டியலை சுகாதாரத்துறை தயார் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளது. அந்த பட்டியல் மீது முடிவு எடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தமிழக மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டதற்கான ஆணையை சமர்ப்பித்தார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் எந்த அடிப்படையில் எட்வின் ஜோவை நியமித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல் அனுபவ அடிப்படையில் நியமித்துள்ளோம் என்று பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

More articles

Latest article