IIT MADRAS FEE HIKE
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப் பட்ட ககோத்கர் கமிட்டியின் பரிந்துரையை சென்ற மாதம், ஐ ஐ டி கவுன்சில் வல்லுனர் குழு விவாதித்து “ஐ ஐ டி கல்விக் கட்டணத்தினை மும்மடங்கு உயர்த்த” பரிந்துரை செய்திருந்தது. இதனை பத்திரிக்கை.காமில் பதிவு செய்திருந்தோம். (ஏழைக்கு எட்டாக்கனி ஆகும் ஐஐடி கல்வி )
இதனை அடுத்து, தற்பொழுது இந்திய மனிதவளத்துறை அடுத்த கல்வி ஆண்டு முதல் ஐ.ஐ.டி. இளநிலைப் படிப்பிற்கான கட்டணத்தை₹ 90,000 யில் இருந்து 2 லட்சமாக உயர்த்த முடிவுசெய்துள்ளது.
குடும்ப வருமானம் ₹ 1 லட்சத்திற்கும் கீழாக இருக்கும் பொதுப்பிரிவு உட்பட அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 100% சலுகை வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், ஊனமுற்றோர், தாழ்த்தப்பட்டோருக்கும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
 
ஏற்கனவே  எஸ்.ஸி, எஸ்.டி மாணவ்ர்கள் மீஎது துவேஷம் பாராட்டும் உயர்சாதியினர் சமூக வலைதளங்களில் “தகுதியற்ற இடஒதிக்கீடு மாணவர்களுக்கும் சேர்த்து உயர்சாதியினர் ஏன் பணம் கட்ட வேண்டும் என பொங்கி எழுந்து பதிவுகள் எழுதி வருகின்றனர்.
இந்த கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஐ ஐ டி மாணவர் ஒருவர், “வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொழில் துவங்க வழி செய்யும் விதமாக , கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது இருக்கும் ஐ ஐ டி கட்டண நிலையில், அவர்களால் இங்கு லாபகரமாக தொழில் செய்ய முடியாது. இங்கு எந்த  குடும்ப வருமானம் ஒரு லட்சத்திற்கு கீழ் இருக்கும் ஏழையால் ஐ ஐ டி நுழைவுத்தேர்வை எளிதில் தேர்ச்சி பெற முடியும் ?. ஏழைக்கு ஐ ஐ டி கல்வி எட்டாக்கனியாவதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்” என்றார்.
அனைவருக்கும் கட்டணம் ஏற்றாமல், எஸ்.சி, எஸ்.டி, மாணவர்களுக்கு மட்டும் சலுகை அறிவித்து  மாணவர்களுக்குள் துவேசத்தை ஏற்படுத்த இது வழிவகுக்கும். அரசும் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியில் குளிர்காயும் என்பதே பத்திரிக்கை.காமின் கருத்து.
இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தாங்கள் கருதுகின்றீர்கள்?