சென்னை: சென்னையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறை களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 34 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 3 பேர் உயிரிழந்து உள்ளனர். சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்று பரவலை தடுக்க பாதுகாப்பு நெறிமுறைளை தீவிரப்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னையில் பள்ளிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், கொரோனா நெறிமுறைகளை கடைபிடிப்பதுடன், முக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைபிடிப்பதையும் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில்  பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம் ,விளையாட்டு மைதானம், ஆய்வகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்,

முக கவசம் அணிகிறார்கள் என ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும்,

கூட்டம் கூடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்

விடுதி வெளியில் சாப்பிடும் போது சில்வர்  தட்டுக்கு  பதிலாக ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் வாழை மட்டைகளை தட்டுகளில் அளிக்க வேண்டும்.

வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளில் செயல்படுத்தக் கூடாது.

பள்ளிகள் , கல்லூரிகள் தினமும் சுத்தம் செய்யப்படவேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலனை தினமும்  பரிசோதிக்க வேண்டும்.

கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த விரும்பினால் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்

இவ்வாற பல கொரோனா தடுப்பு  வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.