டெல்லி: இந்தியாவில் மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், ஒமின்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகை 415 ஆக அதிகரித்து உள்ளது.

நாடு முழுவதும், இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர்,  மற்றும் ஒமிக்ரான பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,189 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,79,815 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக மேலும்  387 பேர் பலியாகி உள்ளதுடன், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 479520 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து  7286 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34223263 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.40% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 77032 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  இதுவரை 1,41,01,26,404 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 66,09,113 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் 11,12,195 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை  67,10,51,627* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை ஒமின்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகை 415 ஆக அதிகரித்து உள்ளது.  தமிழகம் உள்பட  17 மாநிலங்களில் தொற்று பரவியுள்ள நிலையில் இதுவரை 115 பேர் குணமாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108, டெல்லியில் 79 , குஜராத்தில் 43 , தெலுங்கானாவில் 38,கேரளாவில் 37 , தமிழ்நாட்டில் 34 ,கர்நாடகாவில் 31, ராஜஸ்தானில் 22  என ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.  மகாராஷ்டிராவில் 108 பேர் பாதிக்கப்பட்டிருந்தா லும் இதுவரை 42 பேர் குணமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .