மும்பை

நிரவ் மோடியின் ரோல்ஸ் ராய்ஸ், ஃபொர்சே உட்பட 9 வாகனங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சி ஆகியோர் ரூ. 11400 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.   வங்கி அளித்த இந்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    நிரவ் மோடியின் சுமார் 5000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை  பறிமுதல் செய்துள்ளது.

இன்று காலை அமலாக்கத் துறை நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான 9 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.    இதில் ரோல்ஸ் ராய்ஸ், கோஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ், ஹொண்டா, டொயாட்டா  போன்ற பல சொகுசுக் கார்கள் உள்ளன.