சென்னை

ன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை முன்னிறுத்தவில்லை

கடந்த 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஜூன் 18ஆம் தேதி வரை அவருக்கு வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.  அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 14ம் தேதி முதல் இன்று மாலை 3 மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் காவலில் எடுத்து விசாரித்தால், உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். கடந்த வாரம்  செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாகக் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என நீதிமன்றத்தில் மனு ஒன்றை அமலாக்கத்துறை தாக்கல் செய்தனர்.

இன்றுடன் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் நிறைவடைந்ததால், செந்தில் பாலாஜி மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவில்லை.

அமலாக்கத்துறையினர் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவரை முன்னிறுத்தும் சூழல் உருவாகவில்லை என கூறப்படுகிறது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்பதால், நீதிமன்றத்தில் முன்னிறுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஜூன் 28 அன்று காணொலி மூலம் செந்தில் பாலாஜி முன்னிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.