இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான ரூ.16 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இஸ்லாம மத போகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு வங்கதேசத்தின் டாக்க பகுதியில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தூண்டுகோலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாகிர் நாயக்கின் நடவடிக்கைகளை கண்காணிக்கும்படி இந்திய அரசினை வங்கதேச அரசு கேட்டுக் கொண்டது.

zakir

இதன் காரணமாக மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக ஜாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்தது. அதன்பிறகு மும்பையில் உள்ள ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிய ஆய்வு மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு அவரது இஸ்லாமிய ஆய்வு மையங்க்ல் செயல்பட தடையும் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தேசிய புலனாய்வு அமைப்பு ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களையும் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியது.

இதற்கிடையே தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை மீண்டும் அளிக்க கோரியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் ரூ.16.40 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.