சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 18ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது .
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு 97 லட்ச5ம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு நிலையில், இதுவரை மொத்தம் 13 லட்சம் பேர் வாக்காளர்கள் மட்டுமே தங்களின் பெயர்களை சேர்க்கக்கோரி சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதனால் மீதமுள்ள 84 லட்சம் வாக்காளர்கள் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையிடைல், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் இடம்பெறுபவர்கள் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்திருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) சிறப்புத் தீவிர திருத்தத்தின் கீழ் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜனவரி 30 வரை நீட்டித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் (ECI), கேரளா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) கீழ் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜனவரி 30 வரை நீட்டித்துள்ளது.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கும்போது, ஆணையம் கேரளா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கைகளையும், பிற தொடர்புடைய காரணிகளையும் கருத்தில் கொண்டது. அதன் காரணமாக காலஅவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நாளில் இருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் வரை பொதுவாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற்றன. பின்னர் டிச.19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர் க்கு முன்பாக அதாவது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். அதாவது, இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், இரட்டை பதிவு, உரிய ஆவனம் இன்றி போலி வாக்காளர்கள் என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து டிசம்பர் 19 முதல் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர்.
எஸ்.ஐ.ஆர்.க்குப் பிறகான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கக்கோரி ஜனவரி 18ந்தேதி வரை (FORM 6) 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எஸ்ஐஆர் பணியில் இறந்ததாக நீக்கப்பட்ட 26 லட்சம் பேரில் ஒருசிலர் மட்டுமே தாங்கள் உயிருடன் இருக்கும் நிலையில் நீக்கியதாக ஆட்சேபம் தெரிவித்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 35,646 பேர் (FORM 7) சமர்ப்பித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 35,646 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.44 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு பிறகே ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]97லட்சம் பேர் நீக்கம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்!