சென்னை: தமிழகஅரசின் அரசின் அதிரடி அரசானை எதிரொலி காரணமாக, ஒப்புதல் வழங்க அவகாசம் கேட்ட வர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று தமிழகஅரசின்  7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.


ருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும்  தமிழக சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் செய்ததால், அரசு சார்பில் 5 அமைச்சர்கள் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது நடப்பாண்டே மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டியதை தெளிவுபடுத்தினர். அதுபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கவர்னருக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி கடிதம் எழுதினார். மேலும், திமுக மாணவரணி, இளைஞரணியினர் ஆளுநர் ஒப்புதல் வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இருந்தாலும், ஆளுநர் பன்வாரிலால் தனக்கு மேலும் 4 வாரம் அவகாசம் தேவை என கூறி, தாமதத்தை ஏற்படுத்தினார். ஆனால், தமிழகஅரசு பிடிவாதமாக, ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என அறிவித்தது. இதனால் மருத்துவ படிப்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இளநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவிகிதத்திற்கான கலந்தாய்வை மத்தியஅரசு நடத்தி முடிந்தது. இதனால், மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வு குறித்து  கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில்,  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு  நேற்று (அக்டோபர் 29) அதிரடியாக  வெளியிட்டது. கவர்னர் ஒப்புதல் வழங்க தாமதப்படுத்துவதால், சட்டப்பிரிவின்படி, மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையை கருத்தில் கொண்டு  அரசாணை வெளியிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் வேறுவழியின்றி, தனது ஒப்புதலை வழங்கி உள்ளார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்துகளை கேட்டதன் அடிப்படையில் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்துஉள்ளார். இதன் காரணமாக நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்போது சட்டமானது.
இதன் காரணமாக தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.