சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை அடுத்து 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும்  4,600 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் தளர்வுகள் காரணமாக, தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று முதல்  செயல்படத் தொடங்கி உள்ளன. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் 50 சதவீதம் அளவுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில்,   மாநிலம் முழுவதும் உள்ள 575 பத்திரப்பதிவு அலுவலகங்களில் 28,750 டோக்கன்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாத நிலையில், நேற்று ஒரே நாளில் 4,600 பத்திரப்பதிவுகள் முடிந்துள்ளன  என பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.