டில்லி,

மாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய ரெயில் திட்டங்களை அறிவிக்கக்கூடாது என தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

குஜராத்  இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக  அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

இந்நிலையில், மத்திய ரெயில்வே அமைச்சகம்  நாடு முழுவதும் புதிய ரெயில்களை அறிவித்தும், ரெயில்வே புதிய கால அட்டவணையையும் வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் ரெயில்வேக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில்,   ‘‘நாடு முழுவதற்குமான ரெயில்வே புதிய கால அட்டவணையை ரெயில்வே துறை வெளியிடலாம். திட்டமிட்டபடி, நவம்பர் 1–ந்தேதி முதல், அதை அமலுக்கு கொண்டு வரலாம்.

ஆனால், புதிய கால அட்டவணையை விளம்பரப்படுத்தக்கூடாது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்வரை, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான புதிய ரெயில்களை அறிமுகப்படுத்தவோ, தொடங்கி வைக்கவோ கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், மேற்கண்ட 2 மாநிலங்களிலும் புதிய ரெயில்களை அறிமுகப்படுத்த தேர்தல் கமி‌ஷன் முட்டுக்கட்டை போட்டுள்ளது. மேலும் புதிய திட்டங்களை அறிவிக்க்வும் தடை விதித்துள்ளது.