புதுடெல்லி:

வாக்குக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடியை கைப்பற்றுவது நிரூபணமானால், தேர்தலை ரத்து செய்யவோ, தள்ளிவைக்கவோ தங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விடுத்த வேண்டுகோளை மோடி அரசு 4 முறை நிராகரித்துள்ளது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பெறப்பட்டன.

இதில் வாக்குக்கு பணம் கொடுத்தாலோ, வாக்குச்சாவடியை கைப்பற்றினாலோ, அந்த தொகுதியில் வாக்கை ரத்து செய்யவோ, தள்ளிவைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வேண்டும் என 4 முறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கருக்கு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஸீம் ஜெய்தி கடிதம் எழுதினார்.

அதே ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை மத்திய அரசும், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிராகரித்துவிட்டார்.

இதுதவிர, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் புதுச்சேரி, அசாமில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 175.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 52 லட்சம் லிட்டர் அளவுள்ள ரூ. 24 கோடி மதிப்புள்ள சாராயமும்,ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதும் தகவல் அறியும் அறியும் உ.ரிமை சட்டத்தில் கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.