கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் . இதனால் ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்து உடனே படங்களை ரிலீஸ் செய்வதெல்லாம் நடக்காத காரியம் என தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை OTT ல் விற்க முடிவு செய்து வருகின்றனர் .
இதை படக்குழுவினர் நேற்று உறுதி செய்திருந்தனர்.இந்த அறிவிப்புக்கு ஐநாக்ஸ் திரையங்க குழுமம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கவேண்டிய தயாரிப்பாளர்கள், ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகிறார்கள். இது போன்ற நண்பர்களால் ஐநாக்ஸ் நிறுவனம் தன்னுடைய தேர்வுகளை ஆராய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறது என ஐநாக்ஸ் திரையங்க குழு அறிக்கை வெளியிட்டது .
தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் தனது தயாரிப்பான ஜோதிகா நடித்திருக்கும் பொன்மகள் வந்தாள் டிஜிட்டல் பாதையில் சென்றால் சூரியாவின் படங்களை தடை செய்வதாக அச்சுறுத்தியது.
இந்நிலையில் ஈஸ்டர்ன் இந்தியா மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் (EIMPA) OTT களில் நேரடியாக வெளியாகும் படங்கள் குறித்த அச்சம் குறித்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அவர்கள் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், “இது நடந்தால் (டிஜிட்டல் பிரீமியர்ஸ்), பலருக்கு வேலையின்மை இருக்கும், ஏனெனில் சுமார் 9,000 ஒற்றைத் திரைகள்(Single Screen ) மற்றும் மல்டிபிளெக்ஸ் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். “சினிமா அரங்குகளிலிருந்து வரும் ஜிஎஸ்டி வருவாயை அரசாங்கம் இழக்கும்” என்று EIMPA சுட்டிக்காட்டியுள்ளது .