ந்தமான் நிகோபார் தீவு பகுதியில் இன்று காலை  திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே 183 கிமீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் இன்று காலை காலை 7:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக, வீடுகளில் உள்ள பொருட்கள் உருண்டு விழுந்தன. இதனால், பொதுமக்கள் வீட்டைவிட்ட வெளியேறினர். இதனால் சிறிது நேரம் அங்கு பீதி நிலவியது.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்கச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும்.