நாகர்கோவில்: நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தன் பல பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக கடற்ரையோர பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அணுமின் நிலையம் உள்ள கூடங்குளம் பகுதி, காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் மற்றும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிர்வு தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந் தநில அதிர்வு காரணமாக சில மற்றும் பழைய கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், ஆனால், எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. திடீர் நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று அஸ்ஸாம் மாநிலத்தில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டதும், 3 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சில கட்டிடங்கள் உடைந்து விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.