சென்னை: 

திமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.

அரங்கநாயகம் , தமிழக சட்டமன்றத்துக்கு 4 முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் எம். ஜி. ஆர் அமைச்சரவையிலும் பின்னர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.