சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாலும், இன்னும் இரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாலும், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மழை குறித்து டிவிட் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,  ‘சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்றும் நாளையும் (அக். 21, 22) அதிகாலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அக்டோபர் மாத இறுதியில் இயல்பைவிட குறைவான மழையே பெய்யும்.

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒடிசா – வங்கதேசம் நோக்கிச் செல்லும். அரபிக்கடலில் உருவாகும் புயல், இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து செல்லும். இன்று உள் தமிழகம் மற்றும் கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.  கன்னியாகுமரிக்கு இந்த அக்டோபரிலேயே முழு பருவ மழையும் கிடைத்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

அவரது முகநூல் பதிவில், தனிமைப்படுத்தப்பட்ட கூர்மையான தீவிர வசியங்கள் இன்று நாளை KTCC பெல்ட்டில் (சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில்) சாத்தியம். சென்னை அக்டோபரில் சாதாரண மழையுடன் முடிவடையும்.வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழ்வு வட விரிகுடாவில் ஒடிஷாவை நோக்கி வங்காள விரிகுடாவை நோக்கி இழுத்துச் செல்லப்படும். மேற்குத் தொந்தரவுடன் தொடர்புடைய மேற்குத் தொந்தரவு

அரபிக்கடலில் ஏற்படும் சூறாவளி இந்திய கடற்கரையில் இருந்து காலத்திற்கு விலகிச் செல்லும்.
இன்று உள் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி தனிமைப்படுத்தப்பட்ட இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கன்னியாகுமரியில் ஒரு அக்டோபர் மாதம் கிட்டத்தட்ட முழு பருவமழை இந்த அக்டோபர் மாதத்திலேயே கிடைத்துவிட்டது.
அனைவருக்கும் இனிய விடுமுறை நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.