சென்னை

டைபெற  உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1  வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தி.மு.க. கூட்டணி

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம் என்பது இறுதியானாலும் தொகுதி எது என்பது இழுபறியாக இருந்தது. இன்று காங்கிரஸ். மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.  காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 3 தொகுதிகள் மாற்றப்பட்டு புதிய தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. கூட்டணியில் 21 தொகுதிகளில் தி.மு.க.வும், எஞ்சிய 19 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணி

அதிமுக கூட்டணியில் யார் சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் சேருவது உறுதியாகி இருந்தது. இன்று பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் சேருவது உறுதியாகி விட்டதாக இன்று தகவல் வெளியானது. எனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெறுகிறது.

பா.ஜ.க கூட்டணி

பா.ஜ.க கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் அணி, டி.டி.வி . தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெறுகிறது.

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணி, அதி.மு.க கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.