திருச்சி

ன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது.

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.   இதில் கடந்த சனிக்கிழமை முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார். தினசரி அரையர் சேவையும் நடைபெறுகிறது. நேற்று  பகல்பத்து உற்சவ 10வது நாளான நேற்று நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

இன்று ஏராளமான பக்தர்கள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளிய நம்பெருமாளைத் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி என்பது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய நிகழ்வாகும்   இன்று  இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாச; திறக்கப்பட்டது.  சொர்க்க வாசல் என்னும் பரமபதவாசல் திறக்கப்பட்டு, முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார்.

இந்த நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. சென்ற ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ரங்கா கோபுரம் வழியாகக் காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு  இந்த விடுமுறை பொருந்தாது. இன்றைக்குப் பதிலாக டிசம்பர் 18ஆம் தேதி, வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.