டப்பா

ந்திராவில் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலினால் வன்முறை வெடித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.  சமீபத்தில் கடப்பா மாவட்ட முன்னேற்றத்துக்கு காரணம் தெலுங்கு தேசமா,  ஒய் எஸ் ஆர் காங்கிரஸா என இரு கட்சித் தலைவர்களும் வாதத்தில் ஈடுபட்டனர்.   ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ஆர்  ராஜசேகர் ரெட்டியின் சொந்த ஊர் இந்த மாவட்டத்தில் உள்ளது.

இந்த வாதத்தை காண வந்த இரு கட்சித் தொண்டர்களின் வாய்த் தகராறு சிறிது சிறிதாக கல்வீச்சாக மாறியது.   பதற்ற அதிகறித்து வாகனங்கள் தாக்கப்பட்டன.   கடும் வன்முறை வெடித்தது.   அங்கு விரைந்த காவல் துறையினர் ஒய் எஸ் ஆர் கட்சி தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர்.   அதை ஒட்டி மாவட்டம் எங்கும் மேலும் வன்முறை அதிகரித்தது.

வன்முறையைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கடப்பாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.