ஊரடங்கு : கொல்கத்தா நகர் கங்கை நதியில் துள்ளி விளையாடும் டால்பின்கள்

Must read

கொல்கத்தா

ரடங்கால் சுத்தமாகி உள்ள கொல்கத்தா நகர் கங்கை நதியில்  டால்பின்கள் துள்ளி விளையாடும் காட்சி விடியோ ஆகி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் நாடெங்கும் ஊரடங்கு மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது  கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் மே மாதம் 3ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன.   நாட்டில் அதிகமடைந்திருத காற்று மற்றும் நீர் மாசு வெகுவாக குறைந்துள்ளது.   குறிப்பாக கங்கை நதியில் மாசு குறைந்து நதி நீர் குடி நீராக ஆகி உள்ளது.

 கங்கை  நதி அதிகமாக மாசு அடைந்து காணப்படும் இடங்களில் கொல்கத்தா ந்கரம்மிகவும் மோசமானதாகும்.  இங்கு ஹூக்ளி என்னும் பெயரில் கங்கை நதி வங்காள விரிகுடா கடலில் சங்கமிக்கிறது.   நாட்டில் உள்ள அனைத்து மாசுகளையும் இங்கு கங்கை நதி எடுத்து வந்தது எனச் சொல்லலாம்.  இங்கு நதி வாழ் உயிரினங்கள் எதுவும் தென்படாத நிலை இருந்தது.

இந்நிலையில் கங்கை நதியில்  நன்னீரில் வசிக்கும் டால்பின் மீன்கள் துள்ளி விளையாடும் காட்சிகள் படமாக்கப்பட்டுவெளி வந்துள்ளன.    இந்த டால்பின்கள் கடந்த 30 வருடங்களாக இங்கு இல்லாமல் இருந்தன.  தற்போது கங்கை நீர் சுத்தமானதால் இவை தென்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  கொல்கத்தாவில் உள்ள பாபுகாட் பகுதியில் டால்பின்கள் துள்ளி விளையாடும் காட்சியைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

[youtube https://www.youtube.com/watch?v=BL5eK_IJohc]

More articles

Latest article