டில்லி

தேர்தல் குழுவில் உள்ள ஆணையர் அசோக் லாவசாவின் அறிக்கையால் நிதி அயோக் மற்றும் பிரதமர் அலுவலுகம் குறித்த முடிவுகளில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பல தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பிரதமர் மோடியின் பல பரப்புரை பேச்சுக்கள் குறித்த் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. ஆனால் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் தேர்தல் ஆணையம் பிரதமர் மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகா காங்கிரஸ் கட்சி கூறி வருகின்றது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறல் குறித்து விசாரிக்க தேர்தல் குழு ஒன்று அமைக்கபட்டுள்ளது. இந்த குழுவில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மற்றும் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் அசோக் லாவசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் மோடி மற்றும் நிதி அயோக் மீது எழுந்த புகாரில் இந்த குழுவில் அரோரா மற்றும் சுஷில் ஒரு முடிவையும் லாவசா வெஏறொரு முடிவையும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பெரும்பான்மை காரணமாக அசோக் லாவசாவின் முடிவுகள் நிராகரிக்கபட்டுள்ளதாக கூறாப்ப்ட்டுள்ள்து. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையருக்கும் அசோக் லாவசா ஒரு கடித அறிக்கை அனுப்பிஉள்ளர். அதில்,”தேர்தல் ஆணைய குழு கூட்டத்தில் சிறுபான்மையினர் முடிவுகள் ஏற்றுக் கொள்ளபடுவது இல்லை. எனவே நான் இனி இந்த குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ள விரும்பவில்லை.

நான் எனது முடிவுகளை பதிவு செய்வதன் மூலம் ஆணையத்தின் சட்டபூர்வ செயல்பாடுகளை மீட்டெடுக்க முயன்றேன். ஆனால் எனது குறிப்புக்கள் கவனிக்கப்படவில்லை. எனவே நான் இனி இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதில் மற்றும் கருத்துக்கள் தெரிவிப்பதில் பயன் இல்லை என்பதால் கூட்டங்களில் கலந்துக் கொள்வதை ஒத்தி வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

லாவசாவின் இந்த அறிக்கை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கடும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. குறிபாக லாவசா நிதி அயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் பிரதமர் மோடி குறித்த புகார்களில் அவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இந்த விவகாரங்களில் லாவசாவின் குறிப்புகள் கவனிக்கப்படாமல் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், “அசோக் லாவசாவின் கருத்துக்கள் சிறுபான்மை என்பதால் கவனிக்கப்படவில்லை என்பதை அவருடைய அறிக்கை தெளிவு படுத்தி உள்ளது. எனவே நிதி அயோக் மற்றும் பிரதமர் மோடி மீதான புகார்கள் குறித்து மறு பரிசீலனை செய்யப்பட்டு முடிவுகள் மாற்றப்பட வாய்ப்புக்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.