வேலூர்:

யிற்சி இல்லாததால் படித்தும் வேலை கிடைப்பதில் தொய்வு ஏற்படுவதாக,  அமைச்சர் நிலோபர் கபில் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

படித்த மாணவர்களுக்கு போதிய அளவில் பயிற்சி இல்லாத காரணத்தினால் வேலை வாய்ப்பு கிடைப்பதில் சற்று தொய்வு ஏற்படுவதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இன்று வேலைவாய்ப்பு துறை மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமை,  மாநில வணிக வரி துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தனர். ‘ இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன .

இவ்விழாவில் பேசிய அமைச்சர் நீலோபர் கபில், அதிக அளவில் படித்த இளைஞர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத காரணத்தினால் பல இடங்களில் வேலை கிடைக்காமல் உள்ளது .

எனவே தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ளது அந்த நிறுவனங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டு பணியில் சேரலாம் என்று கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் அரசு சார்ந்த 89 தொழிற்பயிற்சி நிலையங்களும் தனியார் சார்பில் 476 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருவதால் இதில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என்று கூறினார்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் 55 பொறியியல் சார்ந்த படிப்புகளும் 28 பாடப்பிரிவுகள் பல்வேறு விதமான தொழில் பயிற்சி சார்ந்த பாடப்பிரிவுகளும் இருப்பதாக தெரிவித்த அவர் இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

தமிழகத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு வயது வரம்பு இல்லை என்பதால் பெண்கள் அதிக அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன் பெறலாம் எனக்கூறினார். இதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மாணவர்கள் அதிக அளவில் படித்து விட்டு எங்கு வேலை செய்ய வேண்டும் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மையங்களிலும் தொழில் வழி நெறிகாட்டும் மையங்களாக மாற்றப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.

மேலும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதால் இதனை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.