சென்னை

ன்று வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது.  மாநிலத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   சென்னையில் பல பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் அதிக கனமழை பெய்து வருவதால் நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  பல சாலைகள் மற்றும் குடியுருப்புக்களை நீர் சூழ்ந்துள்ளது.

கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான ஏரிகள் நிரம்பி வருவதால் உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது. இதனால், நீர்வழித் தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கரையோர மக்கள் பாது காப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன்,

“தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் 9-ம் தேதி (இன்று) தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும். 11-ம் தேதி அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை 11-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. 9-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதன் காரணமாக தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, வரும் 11-ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்”

என எச்சரிக்கை விடுத்துள்ளார்.