வாகன உற்பத்தி சரிவால் பல சிறு தொழில்கள் பாதிப்பு

Must read

 

டில்லி

வாகன உற்பத்தி சரிவால் ஏராளமான சிறு தொழில்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளன.

வாகன விற்பனை கடந்த சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வருகிறது.   பல முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர்.   இதனால் பல வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை மிகவும் குறைத்துள்ளன.  ஒரு சில நிறுவனங்கள் வாகன உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி உள்ளன.  இந்த தொழிற்சாலைகளில் பெருமளவில் தினசரி ஊதியம் பெறும் தற்காலிக தொழிலாளர்கள் உள்ளதால்  அவர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்

இந்த வாகன உற்பத்திக்கு தேவையான பல உதிரி பாகங்கள் வெளி ஒப்பந்தம் மூலம் கொள்முதல்  செய்யப்படுகின்றன.   இந்த உதிரி பாகங்களான போல்ட் மற்றும் நட்டில் இருந்து இருக்கை வரை பல பொருட்கள் சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.   தற்போது வாகன உற்பத்தியாளர்கள் முழுமையாக உற்பத்தியை நிறுத்தி உள்ளபடியால் இந்த சிறு தொழிற்சாலைகளுக்குப் பணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

டில்லியைச் சுறறி உள்ள குருகிராம் மற்றும் மனேசாகர் தொழிற்பேட்டைகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர வகை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.  இந்த தொழிற்சாலைகளில் 20 முதல் 200 பேர் வரை பணி செய்து வருகின்றன.   இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள்  மாருதி, ஹீரோ ஹோண்டா உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் விற்பனையும் தற்போது பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளன.   அது மட்டுமின்றி இந்த மூலப் பொருட்களை எடுத்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களும் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மொத்தத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்போது  வேலை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   அது மட்டுமின்றி மூலப் பொருட்கள் விற்பனை சரிவால் பல வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை மாற்றிக் கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

More articles

Latest article