சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் : சீதாராம் யெச்சூரி

Must read

 

டில்லி

ங்கள் சொந்த வீடுகளிலேயே காஷ்மீர் மக்கள் சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார்.

சென்ற திங்கள் அன்று மத்திய அரசு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ நீக்கம் செய்தது.  அத்துடன் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என  இரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது.  லடாக் பகுதி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.   இந்த நடவடிக்கைகளை முன்னிட்டு இதற்கு முன்பே ஏராளமான ராணுவம் குவிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இதைத் தவிர பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஊரடங்கு சட்டம் போடப்பட்டது.    பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியதாகவும் பக்ரீத் பண்டிகைக்காக கட்டுப்பட்டுக்கள் தளர்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

சென்ற வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் பார்வையிட வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் சென்றனர்.  இருவருக்கும் மாநிலத்துக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதால் இருவரும் ஸ்ரீநகரில் தங்கி உள்ளனர்.

சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டரில், “மிகவும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் நிறைந்த பண்டிகைகளில் பக்ரீத் ஒன்றாகும்.    அதே நேரத்தில் இந்த பக்ரீத் சமயத்தில் காஷ்மீர் மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய நினைக்கிறோம்.  எங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் எங்கு உள்ளனர் எப்படி உள்ளனர் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை எங்களுக்குத் தெரியாத நிலை உள்ளது” என பதிந்துள்ளார்.

More articles

Latest article