சென்னை

டக்கு தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மதிய வெப்ப நிலை வழக்கத்தை விட 4-5  டிகிரி அதிகரித்துள்ளது.

தற்போது கத்தரி வெயில் எனக் கூறப்படும் அக்னி நட்சத்திர வெயில் ஆளை வாட்டி வருகிறது.   இது மே மாதம் 4 ஆம் தேதி ஆரம்பித்து 28 ஆம் தேதி வரை இருக்கும்.   இந்த நாட்களில் வழக்கத்தை விட வெயில் அதிகம் இருந்தாலும் கொரோனா பாதிப்பால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளதால் மக்களுக்கு வெயில் பாதிப்பு அதிகம் இருக்காது எனக் கூறப்படுகிறது.

இந்த வருடம் வழக்கத்தை விட கடுமையாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருகிறது.  நேற்று முதல் மிகவும் கடுமையான வெயிலால் வீட்டினுள் உள்ளவர்களும் கடுமையாக அவதி அடைந்தனர்.  கடந்த இரு தினங்களாக வெயில் 41 டிகிரியை கடந்துள்ளது.  இந்த வெயில் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெயில் அதிகரித்ததற்கு அம்பன் புயல் காரணம் எனக் கூறப்படுகிறது.  இந்த  புயல் தமிழ்கம, மற்றும் தெலுங்கானா பகுதிகளில் காற்றில் நிலவி வந்த ஈரப்பதத்தை எடுத்துச் சென்றுள்ளதால் வெயில் கொடுமை அ திகரித்துளதாக கூறப்படுகிறது.  சாதாரணமாகப் பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி  தொடர்ந்து அதிகரிக்கும் போது அதை அனல் அலை என வானிலை மையம் அறிவிக்கும்.

தற்போது தெலுங்கானாவில் ராயல சீமா மற்றும் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இந்த நிலை உள்ளது.  இதே நிலை இன்னும் ஓரிரு தினங்கள் தொடர்ந்தால் இது அனல் அலை நிலைக்குச் செல்லும்.   தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனல் காற்று வீசத் தொடங்கி உள்ளது. அது இன்னும் ஓரிரு நாட்களில் அதிகரிக்க வாய்ப்புண்டு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.