சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்ச நிலையை எட்டி உள்ளது. இன்று ஒரே நாளில் புதியதாக மேலும் 743 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே குறைந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  12,448 ஆக உயர்ந்த நிலையில், இன்று மேலும் 743 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்  தற்போது 13,191 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டுள்ள 743 பேரில் 553 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்  என்றும், 83 பேர் மும்பையில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை  இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 987 பேர் டிஸ்சார் செய்யப்பட்டு உள்ளனர்.  இதனால், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 60.49% ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,60,068 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இதுவரை தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8,496 ஆண்கள், 4,692 பெண்கள், 3 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.