கொல்கத்தா

முதன் முறையாக தேர்தலில் வென்ற மேற்கு வங்க மக்களவை உறுப்பினர் நுஸ்ரத் ஜகான் தனது திருமணம் காரணமாக பதவி ஏற்கவில்லை.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சமீபத்தில் பதவி ஏற்றனர். குறிப்பாக முதல்முறை வென்ற உறுப்பினர்கள் மிகவும் ஆர்வத்துடன் பதவி ஏற்றுள்ளனர். ஆனால் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும் வங்க திரைப்பட நடிகையுமான நுஸ்ரத் ஜகான் பதவி ஏற்கவில்லை

பதவி ஏற்பு நேரத்தில் துருக்கியில் உள்ள போத்ரும் நகரில் நுஸ்ரத் ஜான் திருமணம் நடந்துள்ளது. நிகில் ஜெயின் என்பவரை இவர் திருமணம் செய்துக் கொண்டதால் இவர் பதவி ஏற்க முடியவில்லை. தனது திருமணச் செய்தியை புகைப்படத்துடன் நுஸ்ரத் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மிமி சக்ரபோர்த்தி

 

இந்த திருமணத்தை முன்னிட்டு நுஸ்ரத் தனது குடும்பத்தினருடன் இந்த  மாதம் 16 ஆம் தேதி போத்ரும் நகருக்கு சென்றுள்ளார், இவர் மேற்கு வங்கம் பசிராத் தொகுதியில் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ஆவார்.  இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

 

இவருடைய சக நடிகையும் முதல் முறையாக மக்களவை தேர்தலில் வென்றவருமான மிமி சக்ரபோர்த்தி என்னும் நடிகை நுஸ்ரத் திருமணத்தில் கலந்துக் கொண்டார். இவராலும் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இவர் ஜாதவ்பூர் மக்களவை தொகுதியில் திருணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.  இவரும் முதல் முறை போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.