ஹைதி நாட்டை சூறையாடிச் சென்றிருக்கும் ஹரிக்கேன் மேத்யூவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 300,000 பவுண்டுகள் உதவியை வாரிக் கொடுத்திருக்கிறார் துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம். மேலும் சுமார் 90 டன்கள் எடையுள்ள அவசரகால உதவிப் பொருட்களையும் தனது சொந்த விமானத்தில் அனுப்பி வைத்திருக்கிறார்.

dubai_king1

ஹரிக்கேன் மேத்யூ கிட்டத்தட்ட 1000 பேரின் உயிரைக் குடித்தும் 300,000 பேரின் உறைவிடங்களை தரைமட்டமாக்கியும் சென்றிருக்கிறது. ஹைதி தன்னை எளிதில் மீள்கட்டமைப்பு செய்துகொள்ள முடியாத ஒரு ஏழை நாடாகும். ஹைதி ஏற்கனவே 2010-இல் ஏற்பட்ட பயங்கர பூகம்ப பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது அதனால் பூகம்பத்தினாலும் அதன் பின்விளைவாக பரவிய உயிர்க்கொல்லி காலராவாலும் இதுவரை சுமார் 10,000 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

dubai_king2

துபாய் அரசின் சார்பில் துபாய் மன்னரின் மனைவி இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசேன் தானே வந்து நிவாரணப்பணிகளை பார்வையிட்டுச் சென்றார். அவர் சார்பில் மகளுக்கு கூடாரங்கள், கொசுவலைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிலையில் ஐ.நா ஹைதியில் பாதிக்கப்பட்ட 14 லட்சம் மக்களுக்கு உதவ உடனடியாக சுமார் 120 மில்லியன் டாலர்கள் பணம் தேவை என்று அறிவித்துள்ளது.

dubai_king3

துபாய் இளவரசி ஹயா கூறும்போது ஹைதியை நான் நினைக்கும்போதெல்லாம் 2010-இல் பூகம்பத்தில் சிதைக்கப்பட்ட இந்த நாட்டை நான் வந்து பார்த்தபோது கண்ட காட்சிகளே என் கண் முன் எப்போதும் நிழலாடுகிறது என்றார். அன்று வந்த அதே விமானத்தில்தான் இன்றும் வந்திருக்கிறேன், இப்போது மீண்டும் அதே போன்றதொரு காட்சியைத்தான் காண்கிறேன் என்று தந்து அனுபவத்தை கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்.
துபாய் அரசரின் மனைவியான இளவரசி ஹயா ஜோர்டான் மன்னரின் மகளும்கூட. இவர் தனது கணவரின் கருணை உள்ளத்தை பாராட்டுவதோடு அனைவரும் ஹைதிக்கு உதவ முன்வருமாறு அழைப்பும் விடுத்திருக்கிறார்.