சிபிஇசி ( China–Pakistan Economic Corridor) என்ற அமைப்பின் வாயிலாக பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தருவதாக உள்ளே நுழைந்துள்ள சீனாவை சில பாகிஸ்தான் தலைவர்கள் சந்தேகக்கண்ணுடன் நோக்குகிறார்கள். இது இன்னொரு கிழக்கிந்திய கம்பெனியாக மாறிவிடுமோ என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

cpec

கிட்டத்தட்ட 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இத்திட்டத்தின் மூலமாக 2015 இலிருந்து 2030க்குள் 70 லட்சம் பாகிஸ்தானிதருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், ஆண்டுக்கு 2 முதல் 2.5 சதவிகிதம் வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்ற கணிப்புகளுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானின் நெப்ரா என்ற மின்துறை சார்ந்த அரசு அமைப்பு இத்திட்டத்துக்கென்று ஒரு யூனிட்டுக்கு 71 பைசா என்று நிர்ணயித்திருக்க சீன முதலீட்டாளர்கள் தங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 95 பைசா வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இந்தச் சுமை பாகிஸ்தானின் ஏழை மக்கள் தோள்களில்தான் சுமத்தப்படும். மேலும் க்வாடார் போன்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள சில உள்கட்டமைப்பு வசதிகளை சீனா தனது வசதிக்காக மட்டுமே செய்து கொள்கிறது. இதில் இந்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
ஆக இத்திட்டம் மூலம் பாகிஸ்தானைவிட சீனாவுக்கே அதிக லாபம் கிடைக்கும் நிலை இருப்பதாகவும். பாகிஸ்தான் மீதே அதிக பொருளாதார சுமைகள் சுமத்தப்பட்டிருப்பதாகவும், இந்நிலை நீடித்தால் சிபிஇசி இன்னொரு கிழக்கிந்திய கம்பேனியாக மாறும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தானின் திட்டக்குழு செயலர் யூசும் நதீம் கோக்கர் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்கள்.