துபாய் வரும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க பலமுறை சென்று வரக்கூடிய ‘மல்டிபிள் என்ட்ரி’ விசா வழங்க துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க துபாய் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் விசா விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் விசா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

90 நாட்கள் வரை துபாயில் தங்குவதற்கான விசா வழங்கப்படும் நிலையில் கூடுதலாக 90 நாட்கள் தங்க மேலும் ஒருமுறை நீட்டிப்பு வழங்கப்படும்.

ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என்றும் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 900 நாட்கள் துபாயில் தங்க விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.