மும்பை

காராஷ்டிர பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர சுகானந்த் பட்னி மரணம் அடைந்தார்.

இன்று மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர். ராஜேந்திர சுகானந்த் பட்னி மரணம் அடைந்தார். சுமர் 59 வயதான அவர் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

பட்னி கடந்த 1997 முதல் 2003 வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் 2004, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல்களில் விதர்பா பிராந்தியத்தில் பா.ஜ.க. கோட்டையான கரஞ்சா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவான்குலே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.