உலகின் முன்னணி பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களில் ஒன்றான மெக்-டொனல்ட்ஸ் கடையில் பாலாடைக்கட்டி (cheese – சீஸ்)-க்கு பதிலாக மலிவான வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்தியதை மகாராஷ்டிரா மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீஸ்-க்கு மாற்றாக அதேபோன்ற சுவையில் வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை வாடிக்கையாளர்களுக்கு சீஸ் என்ற பெயரில் பரிமாறி வந்துள்ளது.

அகமத்நகரில் உள்ள ஒரு மெக்-டொனல்ட்ஸ் கடையில் இதுபோன்ற சீஸ்-க்கு மாற்றாக பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வாடிக்கையாளர்களை தாங்கள் சாப்பிடுவது சீஸ் தான் என்பதை நம்பவைக்க தங்கள் மெனு கார்ட் மற்றும் உணவக விளம்பர பலகைகளில் சீஸ்-க்கு மாற்றான உணவுப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடாமல் இருந்தது மிகப்பெரிய குற்றம் என்று உணவு ஒழுங்குமுறை அமைப்பு மெக்-டொனல்ட்ஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இதனை அடுத்து மாநிலத்தில் உள்ள மற்ற மெக்-டொனல்ட்ஸ் கடைகளில் பரிமாறப்படும் சீஸ் பர்கர், சீஸ் நக்கெட்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் வனஸ்பதி அல்லது மார்கரின் போன்ற சீஸ்-க்கு மாற்றான மலிவான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை நடத்த அம்மாநில உணவு ஒழுங்குமுறை அமைப்பின் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

உலகின் முன்னணி பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களில் ஒன்றான மெக்-டொனல்ட்ஸ் கடையில் பாலாடைக்கட்டி (cheese – சீஸ்)-க்கு பதிலாக மலிவான வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்தியதாக மகாராஷ்டிரா மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.