பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் குடி போதையில் இருந்த  இளைஞர்,  போலீஸ்காரரின்  பைக்கை ஓட்டிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் பிரதான சாலையில் பணியில் இருந்தார்   போக்குவரத்து காவலர் ஒருவர். இவர் தனது பைக்கை சாலை ஓரமாக நிறுத்தியிருந்தார்.  பைக்கிலேயே சாவியை விட்டுச் சென்றிருக்கறார். அதோடு  தொப்பியையும் அதன் மீதே வைத்திருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த போதை இளைஞர் ஒருவர், போலீஸ் தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, போலீஸ் பைக்கை எடுத்து வேகமாக ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், தனது பைக் பறிபோவது தெரியாமல் கடமையே கண்ணாக இருந்திருக்கிறார்.

நல்லவேளையாக சக போலீஸ்காரர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் சொல்ல, அடுத்த சிக்னலில் அந்த போதை இளைஞரை வழி மறித்தனர் போலீஸார். ஆனாலும் அந்த போதை இளைஞர் முறுக்கிக்கொண்டு பைக்கை கிளப்ப, போராடி பைக்கை மீட்டார்கள் போலீஸார்.

அந்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்துக்கு இழுத்து வந்து விசாரித்தார்கள் போலீசார்.   அவர் தன் பெயர் போபோ என்றும், போதையில் “தவறுதலாக” (!) போலீஸ் பைக்கை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கறார். தன்னை மன்னித்து விட்டுவிடும்படியும் கெஞ்சியிருக்கிறார்.

பிறகு போலீசார் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

ஹூம்.. போதை படுத்தும்பாடு!