சென்னை: முக்கிய சாலையான  திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எல்லிஸ் சாலை சந்திப்பில் நள்ளிரவு 1மணி அளவில் 6 இளம்பெண்கள் நல்ல குடிபோதையில், ஒருவருக்கொருவர்,  அடிதடி செய்து, சாலையில்  உருண்டு அதகளம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாசாலை அருகே திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எல்லிஸ் சாலை சந்திப்பில் திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர்கள் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது  நள்ளிரவு 12மணி அளவில், அந்த பகுதியில் உள்ள தனியார் பாரில் இருந்து வெளியே வந்த 6 இளம்பெண்கள், போதைக்தலைக்கேறிய நிலையில், ஒருவருக்கொருபவர் தாக்கிக்கொண்டதுடன், அந்த வழியே வந்த வாகனங்களை மறித்தும் அலப்பறை செய்துகொண்டதுடன், அவர்களுக்குள்ளேயேயும் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு தாக்கிக் கொண்டனர். இதனால், அந்த பக்கம் சாலையோரம் தங்கியிருந்தவர்கள், அந்த வழியாக சென்றவர்களும், இளம்பெண்களின் போதை ஆட்டத்தை கண்டு வியக்கத் தொடங்கினர்.

மக்கள் கூடுவதை கண்ட வாகன தணிகைகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் வந்து பார்த்தபோது, அந்த பெண்கள் போதை தலைக்கேறிய நிலையில், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு, சாலையில் உருண்டது தெரிய வந்தது. அவர்களை பிடித்து, விசாரிக்க முற்பட்ட காவல்துறையினரிடமும் அந்த இளம்பெண்கள், தரக்குறைவாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூடுதலாக சில பெண் போலீசாரை வரவழைத்த காவல்துறையினர், அந்த 6 இளம்பெண்களை மடக்கி கைது செய்ய  முயன்றனர். ஆனால், அந்த போதையிலும் நள்ளிரவு வேலையிலும்,  3 இளம்பெண்கள் காவல்துறையினருக்கு ‘டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட மூன்று பெண்களை மட்டும் வாகனத்தில் ஏற்றி திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு குடி போதை சான்றிதழ் பெற அழைத்து சென்று சான்றிழ் பெற்றுக்கொண்டு, பின்னர் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அந்த குடிகார இளம்பெண்கள் 3 பேரையும்,   திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு  வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிடிபட்ட  இளம்பெண்களிடம் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்கள்,  பிரபலமானவர்களின் சுப நிகழ்ச்சிகளில் மிடுக்கான உடையுடன், அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு மற்றும் உணவு பரிமாற செல்பவர்கள் என்பவரும், தங்களது பணி முடிந்துவிட்டு தங்களுக்கான ஊதியத்தை பெற்றுவிட்டு, நன்றாக குடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

தங்களுக்கான கூலியை பிரித்துக்கொள்வதில் அவர்களுக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டு, இறுதியில் சாலையில் உருண்டு அதகளம் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில்,  இதுவரை இல்லாத அளவுக்கு, ஆண்களுக்கு இணையாக இளம்பெண்கள் குடிபோதையில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர் என நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.