சென்னை:
சென்னை அண்ணாநகர் கோபுரம் இன்று திறக்கப்படுகிறது.

சென்னை அண்ணாநகர் கோபுரம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறக்கப்படுவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் முக்கிய அடையாளமாக திகழ்வது அண்ணா நகர் கோபுரம் என்பதும் பொது மக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தில் மேலே ஏறிச் சென்றால் சென்னையின் அழகை ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு காதல் தோல்வி காரணமாக ஒரு சில காதலர்கள் இந்த டவரில் ஏறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்ததை எடுத்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இந்த கோபுரத்தில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த கோபுரம் சீரமைக்கப்பட்டது என்பதும் இதற்காக ரூ.30 லட்சம் சென்னை மாநகராட்சி செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பக்கவாட்டு பகுதிகள் அனைத்தும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள் என்றும் இன்று முதல் பொதுமக்கள் இந்த கோபுரத்தின் மீது ஏறி பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.