குடிபோதை: இரண்டு பேரை பலி வாங்கிய கார் ரேஸ் வீரர், விகாஸ்ஆனந்த்!

Must read

 
சென்னை:
நேற்று நள்ளிரவில் குடிபோதையில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த 2 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4-aut
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோமீது குடிபோதையில் வந்த இருவர் பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் ஆட்டோவினுள் தூங்கிகொண்டிருந்த டிரைவர்கள் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தை ஏற்படுத்தியவர் பிரபல கார் ரேஸ் வீரர் விகாஸ் ஆனந்த் என்பவர். இவர் சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான எம்.ஆர்.எஃப் ஃபார்முலா 1600 பிரிவு கார் பந்தயத்தில் முதலிடத்தின் வந்து சாம்பியன் பட்டத்தை வென்றவராவார். விகாஸ் ஆனந்தின் தந்தை விஜய் ஆனந்த் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆவார்.

ரேஸ் வீரர் விகாஸ் ஆனந்த்
ரேஸ் வீரர் விகாஸ் ஆனந்த்

இவர்மீது ஆடிகார் ஐஸ்வர்யா மீது போடப்பட்ட அதே பிரிவின் கீழ் வழக்கு பதிய செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா?  அல்லது தற்செயல் விபத்து என்று வழக்கு பதியப்படுமா என்பது போகபோகத்தான் தெரியும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விகாஸ் ஆனந்த் தேசிய அளவிலான கார் பந்தயத்தில் வென்றதையடுத்து பல பத்திரிக்கைகள் கார் பந்தயத்தில் இவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு விமர்சித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Jpeg
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த “மனிதன்” படத்தில் உள்ளது போல பல சம்பவங்கள் நாட்டில் அவ்வப்போது அரங்கேறிவருகின்றன. முதலில் பரபரப்பாக பேசப்பட்ட பாலிவுட் நடிகள் சல்மான்கான் வழக்கு,  கடந்த ஜூலையில் ஓ.எம்.ஆர் சாலையில் ஆடி காரில் வந்த ஒரு பணக்காரப் பெண் 45 வயது ஆண் மீது மோதி அவரைக் கொன்ற சம்பவம்.
இப்பொது அதே பாணியில் விகாஸ் ஆனந்த் ஏற்படுத்திய விபத்தும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
Image Credit: http://newsdog.today/a/article/57b9bcec76f3dfc4acac2d0d/

More articles

Latest article