டிரங்க் & டிரைவ்: 9 வயது சிறுமி உட்பட 3 பேரை கொன்றவருக்கு ஜாமீன்

Must read

ஹைதராபாத்தில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்து 9 வயது சிறுமி உட்பட மூன்று பேரைக் கொன்ற எஞ்சினியரிங் மாணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ramya
கடந்த ஜூலை 1ம் தேதி மாலையில், 9 வயது சிறுமி ரம்யாவை அவரது தாத்தா, தாயார் மற்றும் 2 மாமாக்கள், பள்ளிக்கு சென்று காரில் வீட்டுக்கு திரும்பி அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் இவர்கள் காரின் மீது எதிரே வந்த சொகுசு கார் பயங்கரமாக மோதியது. இதில் சிறுமி ரம்யா அவரது தாத்தா, மாமா ஆகிய மூவரும் மரணமடந்தனர்.
குடிபோதையில் காரை ஓட்டிவந்தவர் பெயர் ஷ்ரவில் (வயது 20) எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் ஆவார். இவர் 90 நாட்கள் காவலில் இருந்ததையும், இவரது படிப்பும் எதிர்காலமும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும் இவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

More articles

Latest article