சென்னை: தமிழ்நாட்டில் விரைவில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், தேர்தல் அலுவலர்களையும் நியமனம் செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த 4 மாதத்திற் குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக செயலாற்றி வருகிறது.

ஏற்கனவே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன்  காணொலி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டங் களை நடத்திய தேர்தல் ஆணையர், வாக்குசாவடிகளை இறுதி செய்தல், வாக்குப்பதிவு இயந்திரங் களின் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அரசியல் கட்சியினருடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து,  வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி வெளியிட்டார். வரைவு பட்டியலில் 22,492 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட் டிருக்கிறது; 25,515 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக 3.15 லட்சம் வாக்காளர்களுடன் வேளச்சேரி உள்ளது.

இதேபோல் திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளி யிட்டார்.  திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 23,42,119 ஆகும். இதில் 11,37,113 ஆண்கள் மற்றும் 12,04,743 பெண்கள் அடங்குவர்.

மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் அனிஷ்சேகர் வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 26,81,727 பேர். இதில் ஆண்கள் 13,63,897, பெண்கள் 13,17,631 ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 13,63,458 ஆகும். இதில் ஆண்கள் 6,67,074, பெண்கள் 6,96,271 பேர் அடங்குவர்.

www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.