சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் அலுவலர் கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மாநகராட்சிக்கு உள்பட்ட  16 தொகுதிகளுக் கான வரைவு வாக்காளர் பட்டியல், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்பேடியால் வெளி யிடப்பட்டது.

அதன்படி, வரைவு பட்டியலில் புதிதாக 22,492 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது; 25,515 பேர்களின்   பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக வேளச்சேரி தொகுதி உள்ளது. இங்கு 3.15 லட்சம் வாக்காளர்களுடன் உள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணைய தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அத்துடன்,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு அலுவலருக்கும் வார்களில் உள்ள வாக்காளர்களுக்கு ஏற்ப 5, 6 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.