சென்னை: இந்திய துறைமுகங்கள் மசோதா மாநில உரிமைகளை பாதிக்கிறது என பாரத பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022,மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், இந்திய துறைமுகங்கள் மசோதா 2022ல் மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் பிரிவுகளை அகற்றிட வேண்டும் என்றும், கடலோர மாநிலங் களின் உரிமைகள், சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுக்கும் வகையில் மசோதா உள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் வரைவு சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்ற வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.