Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

இஐஏ-2020: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவு…

Aug 12, 2020

டெல்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை2020ஐ மாநில மொழிகளில் மொழி பெயர்த்து விடாததை எதிர்த்து தொரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,  மத்தியஅரசு 17-ந்தேதிக்குள் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கில், நாட்டின் 22 மொழிகளில் பெயர்த்து வெளியிட்டு, அதன்மூலம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. ஜூன் 30-ந்தேதி 10 நாட்களுக்குள் 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மத்தியஅரசு  நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 22 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படவில்லை. அதற்கான காலஅவகாசமும் கோரவில்லை.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் டோங்கட் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து,  நீதிமன்ற அவமதிப்பு  மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அரசியலமைப்பின் 8-வது அட்டவணைப்படி பிற மொழிகளிலும் அறிக்கை வெளியிடப்பட்டால் அது திறம்பட பரவுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், மொழிபெயர்ப்புக்கு மாநில அரசின் உதவியையும் கோரலாம் என்றும், இந்த மொழிபெயர்ப்புகள் மத்திய, மாநில சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் வலைத்தளங் களில் 10 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Post navigation

கேரள கோவில்களில் ஆகஸ்ட்17 ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி
இஸ்லாமிய மதம் குறித்து முகநூல் பதிவு: பெங்களூருவில் கலவரம்… போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு…

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer