ஜெ.க்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார் வீட்டிலும் ஐடி ரெய்டு!

Must read

சென்னை,

சிகலா, டிடிவி தினகரன் நிறுவனங்கள், வீடுகள், உறவினர் வீடுகள், ஆதரவாளர்கள், ஆதரவு வழக்கறிஞர்கள் உள்பட  187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமாரும் தப்பவில்லை.

அவரது, சென்னை  நீலாங்கரை வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மற்றொரு வீடு உள்ள திருச்சி ராஜா காலனியிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

இன்று காலை சோதனையிட சென்ற வருமான வரித்துறையினர், டாக்டர் சிவகுமார் சென்னையில் இருந்ததால் வீடு பூட்டி யிருந்தது. அதனால் மேல் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து  அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆனால் கீழ்தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைக்கவில்லை. அதன் சாவியை அதிகாரிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article