அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பல்வேறு மாநில பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. டாக்டர் அஜோய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஒடிசா மாநில பொறுப்பாளராக உள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பை கூடுதலாக கவனிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.