இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : மத்திய அரசு

Must read

டில்லி

மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்விக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் திமுகவை சேர்ந்த  மூத்த வழக்கறிஞர் ஆவார். மேலும் இவர் தமிழக அரசில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆகவும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல ஆகவும் பணி புரிந்துள்லார்.  இவர் மாநிலங்களவையில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

அந்தக் கேள்வியில் வில்சன், “குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி இரட்டை குடியுரிமை வழங்க அனுமதி உள்ளதா?  அவ்வாறு இருந்தால் அது குறித்த விவரங்கள் அளிக்கவும்.  அப்படி இல்லை எனில் அதற்கான விளக்கங்கள் அளிக்கவும்: எனக் கேட்டிருந்தார்.

அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், “இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி எண் 9 மற்றும் குடியுரிமை சட்டம் 1955 இன பிரிவு 9 இன படி இரட்டைக் குடியுரிமைக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை தனது டிவிட்டரில் பதிந்துள்ள வில்சன், “மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை தருவார்கள் என்பது பொய்யானது.  அரசியலமைப்புச் சட்டத்திலும் குடியுரிமைச் சட்டத்திலும் வழி வகையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article