கட்சியை விட்டு போறவங்க பத்தி கவலையில்லை! டிடிவி. தினகரன்

Must read

சென்னை:

ட்சியை விட்டு போறவங்க பத்தி கவலையில்லை என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறி உள்ளார்.

மக்களவை மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அங்கிருந்த பல நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். இந்த நிலையில், டிடிவியின் வலதுகரமாக திகழும் தங்கத்தமிழ்செல்வனும் அதிமுகவுக்கு தாவப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி வடக்கு,, திருச்சி மாநகர் என மூன்று மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், நடைபெற்ற தேர்தலில் அமமுக  தோல்வியை சந்தித்தாலும், அடுத்து வரவிருக்கும் தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என கட்சி நிர்வாகிகளிடையே  உற்சாகமூட்டினார்.

மேலும், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றோர் கட்சி ஆரம்பிக்கும் போது பலர் வெளியேறி உள்ளார்கள். அதுபோல சில சுயநல நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் விலகுவர். புரட்சித்தலைவருக்கும், அம்மா அவர்களுக்குமே துரோகம் இழைத்தவர்கள் உண்டு. இயக்கத்தி லிருந்து மேல்மட்ட தலைவர்கள் சுயநலத்தில் மாறலாம். அடிமட்ட தொண்டர்கள் ஒருநாளும் மாறமாட்டார்கள்.

சிலர் குழம்பிப்போய் மற்றவர்களையும் குழப்புகிறார்கள். அவர்கள் கட்சியை விட்டு போவதை பற்றி கவலையில்லை. அமமுக தொடங்கி ஓராண்டுதான் ஆகிறது. எனவே, யார் எங்கு சென்றாலும் அதை பெரிதாக எண்ண வேண்டாம். அமமுக வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article