ஸ்ரீநகர்:

சியாச்சின் மலைப்பகுதியில்  சேவையாற்றும் இந்திய  ராணுவ வீரர்களுக்கு  சுடசுடச்  ‘பிட்சா’ டெலிவரி செய்து டோமினோஸ் நிறுவனம் சாதனை படைத்துள் ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 70வது குடியரசு தினம் கடந்த 26ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. அன்றைய தினம் சியாச்சின் பனி மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த  இந்திய வீரர்களுக்கு டோமினோஸ் பிட்சா நிறுவனம், சுடச்சுட பிட்சாவை டெலிவரி செய்துள்ளது.

ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் டோமினோஸ் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக பிட்சாவை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.  இது தொடர்பாக புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் டோமினோஸ் நிறுவனம் பெருமையுடன் பகிர்ந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20,000 அடி உயரத்தில் படை வீரர்களுக்கு டோமி னோஸ் பிட்சா நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் சுமார்  4000 பிட்சாக்களை வழங்கி உள்ளது. இதற்காக தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு தயார் செய்யப்பட்டு, அவர்கள் மூலம் பிட்சா அனுப்பி வைக்கப்பட்டது என்றும், வீரர்களுக்கு ஒரு சில நிமிடங்கள் மகிழ்ச்சியை வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த முன்முயற்சியை மேற்கொண்டனர் என்றும் தெரிவித்து உள்ளது.

தங்களது குழுவினர்  வெற்றிகரமாக சியாச்சின் மலைப்பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுக்கு பிட்சாக்களை வழங்கினார்கள்.

குடியரசு தினத்தன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் சியாச்சின் பகுதியில்  பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள், தங்களுக்கு பிட்சா வந்ததை கண்டு ஆச்சரியப் பட்டனர் என்றும்,  அப்போது  அங்கிருந்த ராணுவ வீர்களின் முகத்தில் புன்னகையை காண முடிந்தது என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  நாட்டை பாதுகாப்பதில்  இந்திய இராணுவத்தின் முயற்சிகள் மற்றும் தியாகங்களை பெருமிதமாக கருதுவதாகவும் தெரிவித்து உள்ளது.

சியாச்சினில்  உள்ள நமது நாட்டின் துணிச்சலான வீரர்கள் மற்றும் அதிகாரி களுக்கு சூடான டாமினோவின் பீட்சாவை  வழங்கியதற்காக  நாங்கள் கௌரவிக்கப்பட்டோம், நாட்டிற்காக அவர்கள் செய்யும்  சேவைக்கு எங்கள் நன்றியை தெரிவித்தோம் என்றும்  கூறி உள்ளது.